ஸ்ரீ கொன்னச்சி அம்மன் திருவிழா 2022 | Sri Konnachi Amman Kovil Thiruvila 2022

ஸ்ரீ  கொன்னச்சி அம்மன் திருவிழா 2022 | Sri Konnachi Amman Kovil Thiruvila 2022

ஸ்ரீ  கொன்னச்சி அம்மன் திருவிழா 2022 | Sri Konnachi Amman Kovil Thiruvila 2022


திருச்சி: திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் (எட்டரை)  ஸ்ரீ கொன்னாச்சி அம்மன்  கோவில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாவட்டம் எட்டரை  மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது இக்கோவில். 

பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும்  திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் எட்டரை, முதலைபட்டி, போசம்பட்டி, புலியூர், போதாவூர், மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வது வழக்கம்.

  திருவிழா

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30 -ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ந் தேதி  மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதையும் படியுங்கள்-  பள்ளி ஆசிரியர், மாணவர்கள் சம்பந்தப்பட்ட குரூப் செக்ஸ் வீடியோ விசாரணையில் உள்ளது. POCSO வழக்கு பதிவு
ஸ்ரீ  கொன்னச்சி அம்மன் திருவிழா 2022 | Sri Konnachi Amman Kovil Thiruvila 2022

ஸ்ரீ  கொன்னச்சி அம்மன் தேர்

13 - தேதி ஸ்ரீ கொன்னச்சி அம்மன் தேர் திருவிழா ஒவ்வொரு தெருவிலும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் வீதி உலா வரும்

ஸ்ரீ கொன்னச்சி அம்மன் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அப்போது அங்கு அம்மனுக்கு  மாலை,  தேங்காய், பழம்  படைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஸ்ரீ  கொன்னச்சி அம்மன் முதல் சந்திப்பு
ஸ்ரீ  கொன்னச்சி அம்மன் திருவிழா 2022 | Sri Konnachi Amman Kovil Thiruvila 2022

அம்மனை வெகுவாக மாலையை அணிவித்து பூ அலங்கார அணிவித்து சம்பங்கி பூ மாலையும் வான வேடிக்கையும் முதல் சந்திப்பில் நீங்கள் பார்க்கலாம் நேரம் தோராயமாக 6 -30 இருந்து 7-30க்குள் வந்து சேர்ந்துவிடும். இதையும் படியுங்கள்-   கவர்ச்சியில் குதித்த நடிகை 'ஆலியா பட்'!

ஸ்ரீ கொன்னச்சி அம்மன் எல்லை உடைத்தல்.

 அன்று மாலை எல்லை உடைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். எட்டரையில் வீதி உலா அம்மன் வந்துவிட்டு ஒவ்வொரு பூசையும் வாங்கி சென்று எட்டரை பாளையத்தில் அம்மன் வீதி விழா வந்ததுக்கு அப்புறம் எட்டரை பாளையத்தில் அரசமரம் சென்று அங்கிருந்து எல்லைளைக் கல்லை நோக்கி சென்று எல்லை உடைத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.


திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்பினர் கோவில் விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பஸ் போக்குவரத்து மாற்றம்


 சாலையோரங்களில் தற்காலிக கடைகள் தோன்றியதால் எட்டரை- (கடைவீதியில்) சாலையில் போக்குவரத்திற்கு பகலில் தடை செய்யப்படும். (காலை 7 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை போக்குவரத்து மாற்றப்படும்)
நடந்து சென்றவர்கள் மட்டுமே போலீசாரால் அனுமதிக்கப்படுவார்கள். மோட்டார் சைக்கிள், கார்களில் எட்டரைல் இருந்து எட்டரை ஒத்தக்கடை வழியாக மஞ்சங்கோப்பு  முள்ளிக்கரும்பூர் ஒரு வழியாக இயக்கப்படும் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும். இதையும் படியுங்கள்-  தமிழகத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை,

குறிப்பு

மேலும் இது போன்ற விசேஷங்களும் திருவிழாக்களும் மற்றும் நிகழ்ச்சியிலும் எங்களுடன் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம். 
உங்களின் அருகாமையில் உள்ள தகவல்களை நீங்களும் பகிரலாம் நீங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படலாம் எங்களுடைய ஆசிரியரை தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: sakthivlog@gmail.com

இக்கட்டுரையில் ஏதோன்னு மாற்றங்களும் திருத்தங்கள் இருந்தால் ஆசிரியரே தொடர்பு கொள்ளலாம்.

SAKTHI AANDI

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال